ஒளி
ஒளி எதிரொளிப்பு:
ஒளியானது பொருளின் மீது விழுந்த பிறகு திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு ஒளி எதிரொளிப்பு எனப்படும்.
எதிரொளிப்பு விதிகள்:
1. படுகதிர் , எதிரொளிப்புக்கதிர் , படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில்அமையும்.
2. படுகோணமானது எதிரொளிப்புக் கோணத்திற்ககுச் சமம்.
எதிரொளிப்பின் வகைகள்:
1. ஒழுங்கான எதிரொளிப்பு
2. ஒழங்கற்ற எதிரொளிப்பு
ஒழுங்கான எதிரொளிப்பு:
பளபளப்பான சமதளப்பரப்பில் எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது ஒழுங்கான எதிரொளிப்பு எனப்படும்.
ஒழுங்கற்ற எதிரொளிப்பு:
ஒளி , சொரசொரப்பான பரப்பில் படும்போது , அது பல்வேறு திசைகளில் சிதறலடைகிறது.
எனவே இவ்வகைப் பரப்பில் எதிரொளிப்பு ஒழுங்கற்று காணப்படுகிறது. இதுவே ஒழுங்கற்ற எதிரொளிப்பு எனப்படும்.
பன்முகப் பிம்பங்கள்:
ஒரு சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ஒரேயொரு பிம்பத்தைத் தான் தோற்றுவிக்கும்.
ஆனால் ஒன்றிற்கு மேற்பட்ட சமதள ஆடிகளைத் தகுந்த கோணத்தில் அமைத்தால் , அவை ஒரு பொருளுக்குப் பல பிம்பங்களைத் தோற்றுவிக்கும். இவையே பன்முகப் பிம்பங்கள் எனப்படும்.
பிம்பங்களின் எண்ணிக்கைக்கும் கோணத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது.
பிம்பங்களின் எண்ணிக்கை
= 360°/கோணம் - 1
Comments
Post a Comment